![]() |
stallone in 1983 |
sylvester stallone - இன் சமீபத்திய ஆங்கிலப்படத்தின் சில காட்சிகளை நேற்று பார்த்தேன். அப்போது, அவரை பற்றி படித்த சில விஷயங்கள் நினைவுக்கு வந்தன. அவர் முன்னொரு காலத்தில், நம்முடைய கோடம்பாக்கத்து கலாச்சாரத்தின்படியே, ஹாலிவுட்டில் ஒவ்வொரு உப்புமா கம்பெனியிலும் ஏறி இறங்கி சான்ஸ் தேடிக்கொண்டு இருந்தார். அச்சமயத்தில் அவருக்கு கடுமையான பண நெருக்கடி. தங்கிஇருக்கும் விடுதியின் வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நம்புங்கள். அவருக்கு உதவ யாரும் இல்லை. இரவில் பஸ் ஸ்டாண்டில் படுத்து தூங்கி சில நாட்களை கழித்தார். அப்போது, அவருக்கு xxx படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. இருநூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தின் பெயர் "The party at kitty and stud's" முழுக்க முழுக்க படு ஆபாசமான அந்த படத்தில் நடித்தது பற்றி stallone இப்படி வேதனையோடு சொல்கிறார். "எனக்கு அப்போது இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. ஒன்று, நான் அந்த மோசமான படத்தில் நடித்து, சம்பளமாக இருநூறு டாலர்கள் பெற்று, எனது பழைய விடுதியிலேயே குடியேறுவது, இரண்டாவது, நியூ யோர்க்கின் புறநகர் பகுதிகளில் கத்தி முனையில் வழிப்பறி செய்வது. நான் முதலாம் வழியை தேர்ந்தெடுத்தேன்,".
இது எப்படி இருக்கு?
No comments:
Post a Comment